×

பள்ளி சமையலர்களுக்கு அடிப்படை பயிற்சி முகாம்

தர்மபுரி, செப்.24: தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில், பள்ளிகளில் உணவு சமைக்கும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையின் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை வகித்தார். நகர உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் முன்னிலை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் பேசுகையில், ‘உணவு பொருள் கையாளுபவர்கள் பாதுகாப்பான முறையிலும், தூய்மையான முறையிலும், உணவினை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். உணவு பொருள் தரமானதாகவும், காலாவதி தேதி குறிப்பிட்ட பொருளாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் கையாளுபவர்கள், கைகள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உணவு மாதிரி எடுத்து வைக்க வேண்டும்,’ என்றார்.

உணவு பாதுகாப்பு பயிற்சியாளர் சலீம், உணவுப் பொருள் கையாளுதல், சேமித்து வைத்தல், தனி மனித சுகாதாரத்தை முறையாக பின்பற்றுதல், சமையலறை சுத்தம் மற்றும் சுகாதாரத்தை முறையாக பின்பற்றுதல் குறித்து அறிவுரை வழங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் பேசுகையில், ’அனைத்து மையங்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவுசெய்யப்பட வேண்டும். சமையலர் உதவியாளர், கையுறை மற்றும் தலையுறை கட்டாயம் அணியவேண்டும்’ என்றார். இப்பயிற்சியில் சுமார் 120க்கு மேற்பட்ட சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

The post பள்ளி சமையலர்களுக்கு அடிப்படை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்